பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கொள்ளிடம்:
கொள்ளிடத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கொள்ளிடம் அக்ரஹார தெருவில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் அக்ரஹார தெருவில் நிறைவடைந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை குறித்த விழிப்புணர்வு குறித்த கோஷங்களை எழுப்பியபடியே சென்றனர். ஊர்வலத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ், துணைத்தலைவர் சிவப்பிரகாசம் மற்றும் மகளிர் குழுவைச் சேர்ந்த பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.