தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

மயிலாடுதுறையில் போலீஸ் துறை சார்பில் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை போலீஸ் சூப்பிரண்டு நிஷா தொடங்கி வைத்தார்.

Update: 2023-01-17 18:45 GMT

மயிலாடுதுறையில் போலீஸ் துறை சார்பில் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை போலீஸ் சூப்பிரண்டு நிஷா தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு ஊர்வலம்

மயிலாடுதுறையில் சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி மாவட்ட போலீஸ்துறை சார்பில் கடந்த 11-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை ஒருவாரம் சாலை பாதுகாப்பு வாரவிழா கடைபிடிக்கப்பட்டு வந்தது. இதையொட்டி சாலை பாதுகாப்பு குறித்து துண்டு பிரசுரம் வழங்குதல் உள்பட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

அதன் ஒருபகுதியாக மயிலாடுதுறையில் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு நடந்த ஊர்வலத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

துண்டு பிரசுரம்

முன்னதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். காந்திஜிரோடு, பட்டமங்கலத்தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்ற ஊர்வலம் மீண்டும் கிட்டப்பா அங்காடியை வந்தடைந்தது.

இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், இன்ஸ்பெக்டர்கள் செல்வம், தனிப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்