கரூர் மாவட்ட தேசிய பசுமை படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை பள்ளி தலைமை ஆசிரியர் மெர்ஸி மார்கிரேட் நிர்மலா தொடங்கி வைத்தார். கரூர் சி.எஸ்.ஐ. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் பழைய அரசு மருத்துவமனை, தலைமை தபால் அலுவலகம், ஜவகர்பஜார் உள்பட முக்கிய வீதிகள் வழியாக சென்றன. ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவிகள் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்கும் வகையில் கையில் பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர். இதில் பசுமை படை ஒருங்கிணைப்பாளர் திருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.