விழிப்புணர்வு மராத்தான் போட்டி

சங்கரன்கோவில் அருகே விழிப்புணர்வு மராத்தான் போட்டி நடந்தது.

Update: 2022-07-06 15:52 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே அமைந்துள்ள பெரியசாமிபுரம் தனியார் பள்ளியில் மராத்தான் போட்டி நடைபெற்றது. தொழில்நுட்பத்தால் தொலைத்த நம் வாழ்க்கையை இயற்கை சூழலில் தேட வேண்டும் என்று வலியுறுத்தி விழிப்புணர்வு மராத்தான் நடைபெற்றது. ஆண்கள் 500 மீட்டர் பிரிவில் விஷ்ணு பிரவீன், 3 கிலோ மீட்டர் பிரிவில் ரனோ, 8 கிலோமீட்டர் பிரிவில் பரத், 12 கிலோமீட்டர் பிரிவில் வேல்முருகன், சீனியர் 8 கிலோமீட்டர் பிரிவில் பிரபாகரன் ஆகியோர் முதலிடமும், பெண்கள் பிரிவில் 500 மீட்டர் பிரிவில் இஷானிகா, 3 கிலோ மீட்டர் பிரிவில் ஆன்லின் லிரின்டா, 6 கிலோ மீட்டர் பிரிவில் பிருந்தா, 10 கிலோ மீட்டர் பிரிவில் ஐஸ்வர்யா, சீனியர் பிரிவில் ஹேமலதா ஆகியோர் முதலிடம் பெற்றனர். அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்