போலீஸ் நிலையத்தில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு
பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பாவூர்சத்திரம்:
தேசிய குழந்தைகள் பாதுகாப்பு நாள் தொடர்பாக பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தில் நடந்தது. அரசு பள்ளி மாணவிகளை போலீஸ் நிலையம் அழைத்து வந்து, போலீஸ் நிலைய பணிகள், பராமரிக்கப்படும் கோப்புகள் குறித்தும், அவசர உதவி எண்கள் 181, 1098, 1930 ஆகியவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் அவர்களுக்கு கட்டுரை, கவிதை, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.