வேலூரில் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்

வேலூரில் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.;

Update: 2022-12-04 16:16 GMT

உலக மண் தினத்தை முன்னிட்டு மண் காப்போம் இயக்கம் சார்பில் மண் வளப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழகத்தில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக வேலூரில் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நேற்று நடந்தது. வேலூர் கோட்டை அருகே நடந்த நிகழ்ச்சிக்கு வேலூர் ஈஷா மைய ஒருங்கிணைப்பாளர் வெங்கடசுப்பு தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக கார்த்திகேயன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

தன்னார்வலர்கள் மணிவண்ணன், சிவசங்கரன், உமா சந்திரன், சதீஷ், குணசீலன், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். சைக்கிள் ஊர்வலம் வேலூர் கோட்டையில் இருந்து கிரீன் சர்க்கிள் சென்று அங்கிருந்து அண்ணா சாலை வழியாக அண்ணா நகரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் முடிவடைந்தது. இதில் சைக்கிள் வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்