மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள்

மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது.

Update: 2022-09-14 18:09 GMT

விராலிமலை:

விராலிமலை தாலுகா கல்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது. மாவட்ட பேரிடர் மேலாண்மை துறை சார்பில் செப்டம்பர் மாதம் பேரிடர் விழிப்புணர்வு மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி விராலிமலை தாலுகா கல்குடி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் வருவாய்த்துறை சார்பில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, ஓவியம் மற்றும் பேச்சுப்போட்டிகள் உள்ளிட்ட பேரிடர் விழிப்புணர்வு தொடர்பான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு விராலிமலை தாசில்தார் சதீஸ் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலை வகித்தார். இதில் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் தாசில்தார் சதீஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். அதனை தொடர்ந்து மாணவர்களிடையே நடத்தப்பட்ட விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் விராலிமலை தலைமையிடத்து துணை தாசில்தார் சரவணன், வருவாய் ஆய்வாளர் சுரேந்திரன், ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்