எண்ணும் எழுத்தும் திட்ட விழிப்புணர்வு பிரசார வாகனம்-கலெக்டர் தொடங்கி வைத்தார்
எண்ணும் எழுத்தும் திட்ட விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் சார்பில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் நோக்கில், சிவகங்கை மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்காக செல்லும் விழிப்பணர்வு பிரசார வாகனத்தினை, சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்க நிலை கல்வி) முத்துச்சாமி (சிவகங்கை), சந்திரகுமார் (தேவகோட்டை), உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயு, வட்டார கல்வி அலுவலர் வளர்மதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.