பெண் குழந்தைகளுக்கு கற்பிப்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரம்
பெண் குழந்தைகளுக்கு கற்பிப்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட சமூக நலம் மற்றும் உரிமைத்துறை சார்பில், பெண் குழந்தையை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்பதை வலியுறுத்தும் விதமாக 2 நாள் விழிப்புணர்வு பிரசார பயண வாகனத்தை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து நேற்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனம் மூலம் நேற்று பெரம்பலூர், ஆலத்தூர் ஆகிய வட்டாரங்களில் பெண் குழந்தையை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டங்கள் மற்றும் சட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரசாரம் செய்யப்பட்டது. இன்று (சனிக்கிழமை) வேப்பூர், வேப்பந்தட்டை ஆகிய வட்டாரங்களில் பிரசாரம் மேற்கொள்ளப்படவுள்ளது.