வடமாநில வாலிபர் சைக்கிளில் விழிப்புணர்வு பிரசாரம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து வடமாநில வாலிபர் சைக்கிளில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டார்.

Update: 2022-09-06 18:13 GMT

ஆர்.எஸ்.மங்கலம், 

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த புஷ்வந்த்பொசுராய்(வயது 26) சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தியும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு அனைவரும் சைக்கிள் ஓட்டுவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு பிரசார பயணத்தை கடந்த ஜூலை மாதம் 27-ந்தேதி தனது மாநிலத்தில் தொடங்கியுள்ளார். தொடர்ந்து பீகார், ஒடிசா,ஆந்திரா வழியாக சென்னை வந்த இவர் அங்கிருந்து திருச்சி, காரைக்குடி, ஆர்.எஸ்.மங்கலம் வழியாக நேற்று ராமநாதபுரம் வந்தார். இது குறித்து அவர் கூறும் போது, எரிபொருள் வாகன பயன்பாட்டால் சுற்றுச்சூழல் அதிகம் பாதிக்கப்படுகின்றது. அதனால் அனைவரும் இரு சக்கர வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்களில் பயன்பாட்டை குறைத்து சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் காட்ட வேண்டும். இது குறித்து சைக்கிள் ஓட்டியப்படியே விழிப்புணர்வு பிரசாரம் பயணம் செய்து வருகின்றேன். ஒரு நாளைக்கு 150 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி வருகின்றேன். இந்தியா முழுவதும் சைக்கிளில் செல்ல திட்டமிட்டு உள்ளேன் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்