விழிப்புணர்வு பிரசாரம்

காரியாபட்டியில் தீயணைப்பு துறை சார்பாக விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.;

Update: 2022-10-19 19:57 GMT

காரியாபட்டி, 

காரியாபட்டியில் விபத்தில்லா தீபாவளி பண்டிகை குறித்த விழிப்புணர்வு பிரசாரம் காரியாபட்டியில் தீயணைப்பு துறை சார்பாக நடைபெற்றது. காரியாபட்டி செயின்ட் மேரீஸ் பள்ளியில் தீயணைப்பு விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் முகாம் நடைபெற்றது. தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில் வீரர்கள் மாணவர்களுக்கு செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். மாணவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் பள்ளியின் முதல்வர் இமாகுலேட், துணை முதல்வர் கயல்விழி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்