குழந்தை திருமணத்தை தடுப்பதற்கான விழிப்புணர்வு முகாம்
திருப்பத்தூர் அருகே குழந்தை திருமணத்தை தடுப்பதற்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திருப்பத்தூர் அருகே உள்ள லக்கிநாயக்கன்பட்டியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட பணியாளர்களுக்கு, இளம் வயதில் நடைபெறும் குழந்தை திருமணத்தை தடுப்பதற்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி முனிசாமி தலைமை தாங்கினார். கந்திலி ஒன்றியக் குழு தலைவர் திருமதி தொடங்கி வைத்தார்.
இதில் திருமணத்திற்கு பெண்ணுக்கு 18 வயதும், ஆணுக்கு 21 வயதும் முடிந்து இருக்க வேண்டும் என்றும், குழந்தை திருமணத்தால் ஏற்படும் உடல், மனம், உணர்வு ரீதியான பிரச்சினைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் சேஞ்ச் தொண்டு நிறுவன இயக்குனர் சரஸ்வதி, ஒன்றியக் குழு உறுப்பினர் சாந்தகுமார் மற்றும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.