விலங்குகள் வதை தடுப்புச்சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்
விலங்குகள் வதை தடுப்புச்சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்
கீழ்வேளூர் ஒன்றியம் அகரகடம்பனூர் கிராமத்தில் ஒன்றிய அளவிலான வெறிநோய் தடுப்பூசி மற்றும் விலங்குகள் வதை தடுப்புச்சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு நாகப்பட்டினம் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் சஞ்சீவிராஜ் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். முகாமில் துணை இயக்குனர் டாக்டர் விஜயகுமார், உதவி இயக்குனர் டாக்டர் அசன் இப்ராஹிம் ஆகியோர் பேசினர். தொடர்ந்து விலங்குகள் வதை தடுப்புச்சட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இதில் கீழ்வேளூர் ஒன்றிய கால்நடை உதவி மருத்துவர்கள் கலந்து கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தினர்.