இளவயது திருமணம் குறித்து விழிப்புணர்வு முகாம்
உப்புக்கோட்டையில் இளவயது திருமணம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.
உப்புக்கோட்டை அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் இளவயது திருமணம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது இதற்கு டொம்புச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சாருபானு தலைமை தாங்கி, இளம்வயதில் திருமணம் செய்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி பேசினார். இதில் அரசு நர்சுகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.