மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம்
அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது
திருத்துறைப்பூண்டி ஒன்றியம் பாமணி அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தலைமை ஆசிரியர் யோகானந்தன் தலைமை தாங்கினார். முதுகலை ஆசிரியர் மணிவேலன் அனைவரையும் வரவேற்றார். இதில், மாணவ- மாணவிகளுக்கு பாதுகாப்பு குறித்தும், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்தும், போதை பொருள் பயன்படுத்தாமல் இருப்பது குறித்தும் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. மாணவ-மாணவிகளுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் 1098 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. திருவாரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து செந்தில்குமார், சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முடிவில், முதுகலை ஆசிரியர் முத்தண்ணா நன்றி கூறினார்.