உழவன் செயலி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்

உழவன் செயலி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

Update: 2023-02-22 13:19 GMT

உழவன் செயலி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.உழவன் செயலி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

திருப்பத்தூர் தாலுகா வெங்களாபுரம் கிராமத்தில் பிரீடம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் சார்பில் விவசாயிகளுக்கான உழவன் செயலி பயன்பாடுகள் குறித்து நேரடியாக பயிற்சி அளித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர். பாலா தலைமை தாங்கினார்.

அப்போது அவர் வேளாண் துறை திட்டங்கள், ஒருங்கிணைந்த வேளாண் பண்ணை, மாடி தோட்டங்கள் பற்றியும் இயற்கை விவசாயம் பற்றியும் பேசினார்.

விவசாயிகளுக்கு பொறியியல் துறை சார்பில் குறைந்த வாடகையில் டிராக்டர்கள், வேளான் எந்திரங்கள், வழங்கப்படுகிறது. மானிய விலையில் சோலார் மின் மோட்டாரும் வழங்கப்படுகிறது.

இதில் பயன்பெற விரும்புகிறவர்கள் உழவன் ஆப் மூலம் பதிவு செய்து பயனடையலாம் என்றார்.

நிகழ்ச்சியில் வேளாண் உதவி இயக்குனர் ராகினி, டாக்டர் ராமச்சந்திரன், வேளாண் துறை அலுவலர்கள், ஆத்மா திட்ட அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருப்பத்தூர் பிரீடம் உழவர் உற்பத்தியாளர் நிறுவன முதன்மை அதிகாரி. எழிலரசி அவர்கள் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்