விழிப்புணர்வு முகாம்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கிடையே விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2022-07-10 19:39 GMT

ராஜபாளையம்,

தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி சுற்றுச்சூழல் உறுதி செய்யும் பொருட்டு ராஜபாளையம் நகராட்சி சார்பில் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் தீவிர தூய்மை பணிகள் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கிடையே விழிப்புணர்வு முகாம் நடத்த அறிவுறுத்தப்பட்டது. அதன் பேரில் கழிவுகளை தரம் பிரித்து தானாக முன்வந்து வழங்கி வரும் நாடார் ஆரம்பப்பள்ளி மாணவன் நிஷாந்த் என்பவரை நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி பாராட்டி மாணவன் குடியிருந்து வரும் நேதாஜி தெரு பகுதியில் தூய்மை தூதுவராக நியமனம் செய்தார். அத்துடன் அந்த மாணவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அதேபோல் டி.கே. ராமம்மாள் ஆரம்ப பள்ளி மாணவன் உதயன் என்பவரை பாராட்டி குடியிருந்து வரும் மங்காபுரம் பகுதியில் தூய்மை தூதுவராக நியமனம் செய்து சான்றிதழ் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை நகராட்சி நகர் நல அலுவலர் சரோஜா தலைமையில் துப்புரவு ஆய்வாளர்கள் செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்