போதை பொருட்கள் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கலை பயணம்

போதை பொருட்கள் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கலை பயணத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்

Update: 2022-12-08 14:27 GMT

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை சார்பில் சாராயம், மது, போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து ஆடல், பாடலுடன் கூடிய விழிப்புணர்வு கலை பயணத்தை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் இன்று தொடங்கி வைத்தார்.

இதையடுத்து பஸ்கள், ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டினார். மேலும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மேயர் சுஜாதா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாபு, உதவி ஆணையர் கலால் (பொறுப்பு) விஸ்வநாதன், உதவி கலெக்டர் பூங்கொடி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்