பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Update: 2022-11-03 18:45 GMT

கோவை

கோவை ரெயில் நிலையம் அருகே தெற்கு தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த தீயணைப்பு நிலையத்தை பார்வையிட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் வந்திருந்தனர். அவர்களை நிலைய அலுவலர் செல்வமோகன் வரவேற்று தீயணைப்பு நிலையத்தை சுற்றி காண்பித்தார். பின்னர் அவர், மாணவ-மாணவிகளுக்கு பேரிடர் காலங்களின் போது தீயணைப்பு துறை எவ்வாறு விரைந்து செயல்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபடுகின்றனர்.

மேலும் காயமடைந்தவர்கள், தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து எடுத்து கூறினார். தொடர்ந்து அவர், மாணவ-மாணவிகளுக்கு தீ விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்கி கூறினார். தொடர்ந்து பருவமழையின் போது மின்கம்பங்களின் அருகில் செல்லக்கூடாது, அறுந்து கிடக்கும் மின்சார ஒயர்களை மிதிக்கக்கூடாது உள்ளிட்டவை குறித்து எடுத்து கூறினார். தொடர்ந்து தீ அணைப்பு குறித்த செயல்முறை விளக்கமும் தீயணைப்பு துறை வீரர்களால் செய்து காண்பிக்கப்பட்டது. வெள்ளத்தில் சிக்கும் போது மிதவைகளை பயன்படுத்தி தப்பித்து கொள்வது குறித்து தீயணைப்பு துறையினர் எடுத்து கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்