போக்சோ சட்டம் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு

கோத்தகிரியில் போக்சோ சட்டம் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2022-08-17 14:25 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரி காவல்துறை சார்பில், போக்சோ சட்டம் மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோத்தகிரியில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் குன்னூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி, சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார், பெண் குழந்தைகள் பாலியல் பாலியல் சீண்டல்களில் இருந்து தற்காத்துக் கொள்வது, போக்சோ சட்டத்தின் விதிமுறைகள், இளம் வயதில் திருமணம் செய்வதால் ஏற்படும் விளைவுகள், சமூக வலைதளங்களை மாணவ- மாணவிகள் எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்துவது, போதை பொருட்களை பயன்படுத்துவதால் உடல் நலம் பாதிக்கப்படுவதோடு, குற்ற செயல்களில் ஈடுபட தூண்டுவது உள்ளிட்ட தீமைகள் ஏற்படுகின்றன என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் மாணவிகள், ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்