கூடலூர் அருகே யானைகள் குறித்து ஆதிவாசி மக்களுக்கு விழிப்புணர்வு
கூடலூர் அருகே யானைகள் குறித்து ஆதிவாசி மக்களுக்கு விழிப்புணர்வு
கூடலூர்
கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம் காரம் உத்தரவின்பேரில் முரம்பிலாவு மற்றும் கடசன கொல்லி ஆதிவாசி கிராமங்களை சேர்ந்த பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள், ஊர் பிரமுகர்கள் அனைவரும் யானைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர் வழங்கி, யானைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. பின்பு பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள் பொதுமக்கள் என சுமார் 60- பேரை பஸ்சில் பைக்காரா அழைத்து சென்று காண்பிக்கப்பட்டது. பின்னர் மதிய உணவு வழங்கி அனைவரும் பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.