பொள்ளாச்சியில் மது, சாராயத்துக்கு எதிரான விழிப்புணர்வு

பொள்ளாச்சியில் மது, சாராயத்துக்கு எதிரான விழிப்புணர்வு நடைபெற்றது.

Update: 2022-11-22 19:00 GMT

பொள்ளாச்சி

கோவை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கியது.

இதை தொடர்ந்து திருவள்ளுவர் திடலில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பறை அடித்தும் நடனம் மூலமும் பொதுமக்களுக்கு கள்ளச்சாராயம் மற்றும் அதன் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பொள்ளாச்சி தாலுகாவில் மட்டும் 10 இடங்களில் நடைபெறுகிறது. இதில் கோட்ட கலால் துறை அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், மதுவிலக்கு போலீசார் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து கலால்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

மது மற்றும் கள்ளச்சாராயம் குடிப்பதால் பல்வேறு தீமைகள் ஏற்படுகின்றன. தூக்கமின்மை, வாந்தி, வயிற்றுப்புண், காசநோய், உயர்ரத்த அழுத்தம், இருதய வீக்கம் ஏற்படுகிறது. கல்லீரல் பாதிக்கப்படுவதோடு, மாரடைப்பு ஏற்பட்டு திடீர் மரணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.மேலும் மது மற்றும் கள்ளச்சாராயம் குடிப்பதால் மனஅழுத்தம் ஏற்பட்டு தற்கொலைக்கு தூண்டுகிறது. எனவே மது, கள்ளச்சாராயத்திற்கு எதிராக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்