கரூர் மாவட்டம், நொய்யல் அருகே குறுக்குச்சாலை அண்ணாநகர் பகுதியில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு யோகா பயிற்சி மற்றும் யோகா குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஹோமியோபதி மருத்துவர் சாந்தி தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு முகாமில் பங்கேற்ற பெண்களுக்கு யோகா பயிற்சி அளித்தனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு யோகா பயிற்சி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர்.