கோத்தகிரியில் போதைப் பொருட்களின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு

கோத்தகிரியில் போதைப் பொருட்களின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு

Update: 2023-05-10 18:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரி காவல்துறை சார்பில் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு கஞ்சா மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கோத்தகிரி பஸ் நிலையத்தில் நடைபெற்ற கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு குன்னூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தசாமி தலைமை வகித்து பேசுகையில், போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகள், உடல் நலம் கெடுதல், வருவாய் இழப்பு ஏற்படுதல், நினைவுத் திறன் பாதிப்பு, குற்றச் செயல்களில் ஈடுபட தூண்டுவது உள்ளிட்ட தீமைகள் ஏற்படுகின்றன. மேலும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானால் அதிலிருந்து விடுபடுவது கடினம். எனவே போதைப் பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்க, போதைப் பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே தற்போது போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கண்காணித்து, அவர்களுடன் நட்பாக பழகி தவறான பாதையில்.செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று விளக்கிக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பதி, சப் இன்ஸ்பெக்டர் ரஹ்மான்கான் உள்பட போலீசார், பொதுமக்கள் மற்றும் பயணிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்