மக்கும், மக்காத குப்பைகளை பிரித்தெடுப்பது குறித்து விழிப்புணர்வு
சாயல்குடி பேரூராட்சியில் மக்கும், மக்காத குப்பைகளை பிரித்தெடுப்பது குறித்து விழிப்புணர்வு நடத்தப்பட்டது.
சாயல்குடி,
.சாயல்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட இருவேலி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்தெடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். வார்டு உறுப்பினர் ஆபீதா அனிபா அண்ணா, இளநிலை உதவியாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் கோவில் பிள்ளை வரவேற்றார்.
பேரூராட்சி செயல் அலுவலர் சேகர் மாணவ-மாணவிகளிடம் கூறுகையில் சுத்தமான மற்றும் பசுமையான நீடித்த சுற்றுச்சூழலை உருவாக்கும் நிலைமையை உருவாக்கிட மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து கொடுக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது உள்ளிட்டவற்றை எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் கரிமுல்லா முருகேசன், திருமேனி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.