வேலை வாய்ப்பு முகாம் குறித்து விழிப்புணர்வு

வேலை வாய்ப்பு முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2022-06-21 20:03 GMT

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தால் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள வேலை நாடுனர்களுக்கு பயன்படும் வகையில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற 25-ந் தேதி அன்று மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்குபெறும் இந்த முகாமில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளது.இதுகுறித்த தகவல்களை பொதுமக்களிடையே விளக்கிக் கூறும் வகையில் எசனை ஊராட்சியில் விழிப்புணர்வு பிரசாரத்தை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், 8-ம் வகுப்பு படித்தவர் முதல் பட்ட மேல்படிப்பு படித்தவர்கள் வரை இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த வாய்ப்பை படித்த இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த வேலை வாய்ப்பு முகாம் குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகள் அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் மற்றும் பஸ் நிலையம், தியேட்டர்கள், கல்லூரிகளில் விளம்பர பதாகைகள் வைப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்