அரசு பள்ளியில் தீ விபத்து குறித்து விழிப்புணர்வு
நாட்டறம்பள்ளி அருகே அரசு பள்ளியில் தீ விபத்து குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நாட்டறம்பள்ளி அருகே கத்தாரி பகுதியில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் சுமார் 120 மாணவ மாணவிகளுக்கு தென்மேற்கு பருவமழை பேரிடர் காலங்களில் நீர் நிலைகளிலும், தீ விபத்து போன்ற சம்பவங்களிலும் எப்படி தங்களை பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
தீயணைப்புத்துறை மாவட்ட துணை இயக்குனர் சரவணகுமார் தலைமையில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் மற்றும் தீயணைப்பு குழுவினர் செயல்விளக்கம் செய்து காட்டினர்.
அப்போது தீ விபத்து ஏற்படும் சூழ்நிலையில் எப்படி முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்வது, விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவது, பாதுகாப்பு உபகரணங்களை கையாள்வது, உயரமான மாடி கட்டிடங்களில் சிக்கிக் கொள்பவர்களையும் நீர்நிலைகளில் மூழ்கியவர்களையும் உபகரணங்களை பயன்படுத்தி காப்பாற்றுவது போன்றவைகளை செயல்விளக்கம் மூலம் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.