பயிர் எச்சம் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு
சளுக்கை கிராமத்தில் பயிர் எச்சம் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வந்தவாசி
வந்தவாசி அருகே சளுக்கை கிராமத்தில் கலவை ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரி மாணவிகள் கிராமப்புற வேளாண் அனுபவ பயிற்சியில் ஒரு பகுதியாக சலுகை கிராம மக்களுக்கு மற்றும் விவசாயிகளுக்கு பயிர் எச்சம் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விழிப்புணர்வின்போது பயிர் எச்சம் என்றால் என்ன, அதனை முறையாக அகற்றாமல் இருப்பதாலும் அதனை எரிப்பதன் மூலம் வரும் தீமைகள் பற்றியும்
அந்த பயிர் எச்சத்தை எவ்வாறு மதிப்பு கூட்டு பொருளாக மாற்றுவது என்று கிராமப்புற மக்களுக்கு மாணவிகள் எடுத்துரைத்தனர்.