தூய்மை பணி குறித்த விழிப்புணர்வு
தூய்மை பணி குறித்த விழிப்புணர்வு நடந்தது.
தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் என்ற பெயரில் கரூர் மாநகராட்சி சார்பில் மாதத்தில் 2 சனிக்கிழமைகளில் மாபெரும் தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக எனது கரூர் எனது பெருமை திட்டத்தின் கீழ் கரூர் மாநகராட்சி 12-வது வார்டுக்குட்பட்ட பசுபதிபாளையம் தெற்கு தெரு பகுதியில் வீடு வீடாக சென்று குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இதில் கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர். மேலும், முறையாக குப்பைகளை தரம் பிரித்து வழங்கிய பெண்களை ஊக்கப்படுத்தும் வகையில், 2 பிளாஸ்டிக் பக்கெட்டுகள் பரிசாக வழங்கப்பட்டன.