குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2023-08-01 18:34 GMT

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் துறை சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, பெரம்பலூரில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து மற்றும் போலீஸ் ஏட்டு சுமா, ஒன் ஸ்டாப் மையத்தின் உறுப்பினர் மேகலா ஆகியோர் கலந்து கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குழந்தைகள் பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன.

இதில் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையத்திற்கு 181 என்ற இலவச உதவி எண்ணிற்கும், பெண்களுக்கான உதவி மையத்தின் உதவி பெற 112 என்ற எண்ணிற்கும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இருந்தால், 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும், பள்ளி மாணவிகளுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி மையத்திற்கு 14417 என்ற எண்ணிலும், முதியோர் உதவி தொடர்பாக 14567 என்ற எண்ணிலும், சைபர் கிரைம் தொடர்பாக பிரச்சினைகள் இருந்தால் 1930 என்ற எண்ணிலும் தெரிவித்து உடனடியாக தீர்வு பெறலாம். போக்சோ சட்ட பயன்பாட்டின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக்கூறப்பட்டு, ஒவ்வொரு மாணவியும் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தங்களது பெற்றோரிடம் அச்சமின்றி தெரிவித்து, அதற்கான தீர்வு பெற வேண்டும். மாணவிகள் ஒவ்வொரும், தவறான தொடுதல் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்