அரசு பள்ளி மாணவர்களுக்கு விபத்தில்லா தீபாவளி குறித்து விழிப்புணர்வு

தகட்டூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு விபத்தில்லா தீபாவளி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது

Update: 2022-10-23 18:45 GMT

வாய்மேடு:

நாகை மாவட்டம் வாய்மேடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையம் சார்பாக விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தகட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் பூபதி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் தனக்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின்போது விபத்தில்லாமல் தீபாவளியை கொண்டாடுவது எப்படி? என்பது குறித்து மாணவர்களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இதுதொடர்பான துண்டு பிரசுரமும் வினியோகம் செய்யப்பட்டது. இதில் கூட்டுறவு சங்க இயக்குனர் அண்ணாதுரை, கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் இலக்குவன், வர்த்தக சங்கத் தலைவர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்