பொம்மிடியில்வடமாநில தொழிலாளர்களிடம் போலீசார் விழிப்புணர்வு

Update: 2023-03-05 19:00 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பொம்மிடியில் உள்ள தனியார் நூற்பாலையில் 100-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என வரும் வதந்தியால், வடமாநில தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர்.

இதனையடுத்து அரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் மேற்பார்வையில் பொம்மிடி சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட நூற்பாலைக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்த வடமாநில தொழிலாளர்களிடம் தங்களுக்கு ஏதாவது இடையூறு ஏற்பட்டால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். மேலும் அவர்களின் குடும்பத்தினரின் குறைகளையும் கேட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்