தூய்மை விழிப்புணர்வு பிரசாரம்

தூய்மை விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

Update: 2022-11-01 18:45 GMT

காரைக்குடி, 

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், மத்திய அரசு அலுவலகங்களில் சுகாதார பணிகள் மற்றும் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்படுகிறது. இந்த பிரசார பணிகள் கடந்த ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி முதல் வருகிற 15-ந் தேதி வரை நடக்கிறது. இதற்கிடையே, மதுரை கோட்ட ரெயில்வே தபால் சேவைப்பிரிவு (ஆர்.எம்.எஸ்.) சார்பில், காரைக்குடி தபால் பிரிப்பகத்தில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதாவது, கடந்த மாதம் 2-ந் தேதி முதல் நேற்று வரை சிறப்பு தூய்மை திட்டம் தபால் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, காரைக்குடி ரெயில்வே தபால் பிரிப்பக அலுவலக வளாகம் முழுவதும் பொக்லைன் எந்திரம் மூலம் தூய்மைப்படுத்தப்பட்டது. முள்புதர்கள் மண்டிக்கிடந்த அலுவலகம் தற்போது தூய்மைபடுத்தப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அத்துடன், வளாகத்தை சுற்றிலும் உள்ள சுவர்களில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து சுவர் ஓவியம் வரையப்பட்டுள்ளது. மேலும் 24 மணி நேர தபால் அலுவலமாக இந்த அலுவலகம் மாற்றப்பட்டுள்ளது. இந்த சேவையை சுற்றுவட்டார பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மதுரை ரெயில்வே தபால் சேவை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் ஜவகர்ராஜ் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்