தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இளையான்குடி,
இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் பெண்களுக்கான ஊட்டச்சத்து மற்றும் ரத்தசோகை விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் அடுப்பில்லா ஆரோக்கிய சமையல் போட்டி நடந்தது. கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி வழிகாட்டல் படி கல்லூரி துணை முதல்வர் ஜஹாங்கீர் தலைமையில் "அடுப்பில்லா ஆரோக்கிய சமையல்"என்னும் தலைப்பில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. சாலைக்கிராமம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மதினா பெண்களுக்கான ஊட்டச்சத்து மற்றும் ரத்தசோகை குறித்து பேசினார். இதில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை நாட்டு நல பணித்திட்ட அலுவலர்கள் அஸ்மத்து பாத்திமா, நூர்முகமது, அப்ரோஸ் மற்றும் சேக் அப்துல்லா ஆகியோர் செய்திருந்தனர்.