படிப்பில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசு

தென்காசி பள்ளியில் படிப்பில் சிறந்து விளங்கிய மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2023-04-15 18:45 GMT

தென்காசி சி.எம்.எஸ். தொடக்கப்பள்ளியின் 151-வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் ஜாண் கென்னடி தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் சண்முகசுந்தர பாண்டியன், கூடுதல் வட்டார கல்வி அலுவலர் இளமுருகன், எஸ்.எஸ்.ஏ. மேற்பார்வையாளர் சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு படிப்பில் சிறந்த பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

விழாவில் நகர்மன்ற துணைத்தலைவர் கே.என்.எல்.சுப்பையா, கவுன்சிலர் காதர் மைதீன், தொழிலதிபர் முகமது அமானுல்லா, வக்கீல் சங்க துணைத்தலைவர் தாஹிரா பேகம், ஆசிரியை ராஜலட்சுமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில் தலைமை ஆசிரியை சுகந்தி சந்திரகாந்தம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ரெஜினாள் கோகிலம், ஹெப்சி பேபி ராணி ஆகியோர் செய்து இருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்