சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு சுதந்திர தின விழாவில் தமிழக அரசின் விருது

திருவாரூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு சுதந்திர தினவிழாவில் தமிழக அரசின் விருது வழங்கப்படுகிறது. இதற்கு வருகிற 26-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்தார்.

Update: 2023-06-05 18:45 GMT

கொரடாச்சேரி:

திருவாரூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு சுதந்திர தினவிழாவில் தமிழக அரசின் விருது வழங்கப்படுகிறது. இதற்கு வருகிற 26-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு விருது

ஓவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழா அன்று மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்த சமூகபணியாளர், தொண்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் வருகிற 15.8.2023 அன்று நடைபெறும் சுதந்திர தின விழா அன்று மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்த சமூக பணியாளர், மருத்துவர், தொண்டு நிறுவனம், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு விருதுகளான 10 கிராம் தங்க பதக்கம், சான்றிதழ் ஆகியவை தமிழக முதல்-அமைச்சரால் கோட்டை கொத்தளத்தில் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்க 26-ந்தேதி கடைசி நாள்

எனவே மேற்காணும் விருதுகளுக்கு தகுதியான விருப்பமுள்ள நபர்கள் திருவாரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அறை எண்:6, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், திருவாரூர்-610004 என்ற முகவரியில் விண்ணப்பம் பெற்று உரிய ஆவணங்களுடன் வருகிற 26.6.2023-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொழிற்பழகுனர் பயிற்சி சேர்க்கை முகாம்

கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் பிரதான் மந்திரி தேசிய தொழிற்பழகுனர் பயிற்சி சேர்க்கை முகாம் நடைபெறுகிறது. முகாம் வருகிற 12.6.2023 அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இதில் கோயம்புத்தூர் மற்றும் சென்னையில் உள்ள முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு பிரதான் மந்திரி தேசிய தொழிற்பழகுனர் பயிற்சிக்கு பயிற்சியாளர்களை தேர்வுசெய்ய உள்ளார்கள். எனவே முகாமில் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள் புகைப்படம் மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறும், மேலும் விவரங்களுக்கு 04365-250126 என்ற தொலைபேசி எண்ணில் உதவி இயக்குனர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்