யோகா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

யோகா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2023-04-08 20:56 GMT

சிவகிரி:

தென்காசி மாவட்டம் சிவகிரியில் பிரணா யோகா பயிற்சி பள்ளியில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ - மாணவிகள் யோகா பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் மாவட்ட அளவில் பல்வேறு யோகா போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர். கடந்த மாதம் திருப்பூரில் நடந்த யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் மாணவ- மாணவிகள் பங்கேற்று மே மாதம் சர்வதேச அளவில் தாய்லாந்தில் நடக்கக்கூடிய யோகா போட்டியில் கலந்து கொள்ள 10 பேர் தேர்வாகியுள்ளனர்.

இதையடுத்து அவர்களுக்கு கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அடிவாரத்தில் வைத்து நினைவு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிவகிரி பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் லட்சுமிராமன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியை மாஸ்டர் அருண்குமார் தொகுத்து வழங்கினார். தி.மு.க. மாவட்ட மாணவரணி சுந்தரவடிவேலு, கவுன்சிலர்கள் விக்னேஷ் ராஜா, செந்தில்குமார், மருதவள்ளி, ரத்தினராஜ், சித்ராதேவி, பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்