நெல்லை டவுன் போலீஸ் நிலையத்துக்கு விருது
நெல்லை டவுன் போலீஸ் நிலையத்துக்கு விருது கிடைத்ததை தொடர்ந்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பாராட்டினார்.
தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் சிறந்த ேபாலீஸ் நிலையங்களாக 36 போலீஸ் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டன. அந்த போலீஸ் நிலையங்களுக்கு தமிழக அரசால் சென்னையில் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் நெல்லை மாநகர டவுன் போலீஸ் நிலையமும் தேர்வு செய்யப்பட்டு சிறந்த போலீஸ் நிலையத்துக்கான விருதை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி பெற்றார். நேற்று அவரை மாநகர கமிஷனர் ராஜேந்திரன் தனது அலுவலகத்துக்கு அழைத்து பாராட்டு தெரிவித்தார்.