சிறப்பாக பணிபுரிந்த தூய்மை காவலர்களுக்கு பரிசு

திருப்பத்தூர் நகராட்சி சார்பில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மை காவலர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2023-02-25 17:33 GMT

திருப்பத்தூர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு நிரந்தரம் மற்றும் தற்காலிக தூய்மை பணியாளர்கள் 203 பேர் பணியாற்றி வருகிறார்கள்.

சிறப்பாக தூய்மை பணியில் ஈடுபட்டவர்களுக்கு நகராட்சி சார்பில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் நகராட்சியில் நடைபெற்றது. துப்புரவு அலுவலர் இளங்கோ தலைமை தாங்கினார்.

மூன்று மண்டலங்களில் சிறப்பாக பணிபுரிந்த 12 தூய்மை காவலர்களுக்கு நகராட்சி ஆணையாளர் ஜெயராம ராஜா, நகராட்சி துணைத்தலைவர் சபியுல்லா, நகராட்சி கவுன்சிலர் மு.வெற்றி கொண்டான் ஆகியோர் பரிசுகளை வழங்கி பேசினார்கள்.

நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள், தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்