நயன்தாரா மகனாக நடித்த ரித்விக்கிற்கு விருது .. செல்லமாய் அழைத்து பாராட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்..!
சினிமாவில் அசத்தி வரும் குழந்தை நட்சத்திரமான ரித்விக்கிற்கு விருது வழங்கி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கவுரவித்துள்ளார்.
சென்னை,
யூடியூபில் ரித்து ராக்ஸ் என்ற சேனல் மூலம் அறிமுகமான ரித்விக் என்ற சிறுவன், பல்வேறு வேடங்களுடன் வீடியோக்களை பதிவிட்டு இணையத்தில் மிகவும் பிரபலமானார்.
இதனை தொடர்ந்து, சினிமாவில் வாய்ப்பு கிடைத்த நிலையில், நயன்தாராவுடன் O2 என்ற படத்திலும், மற்றும் கார்த்தியுடன் சர்தார் படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தினார்.
இந்த நிலையில், கோவை தனியார் கல்லூரியில் பிரபலமானவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் அம்பில் மகேஷ் பொய்யாமொழி, சினிமாவில் அசத்தி வரும் குழந்தை நட்சத்திரமான ரித்விக்கிற்கு விருது வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளார்.