மதர் சமூக சேவை நிறுவனத்துக்கு விருது; அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

மதர் சமூக சேவை நிறுவனத்துக்கு அமைச்சர் கீதாஜீவன் விருது வழங்கினார்.

Update: 2023-06-07 18:45 GMT

தட்டார்மடம்:

தூத்துக்குடி மாவட்டத்தில் மதர் சமூக சேவை நிறுவனம் பெண்களின் மேம்பாட்டுக்காகவும், குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காகவும், மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒரு கோடி பனை மரங்களை வளர்க்கவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த சேவைகளை அங்கீகரித்து, ஊக்கப்படுத்தும் விதமாக மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான விருது குழுவினரால் மதர் சமூக சேவை நிறுவனம் தமிழ்நாடு கிரீன் சாம்பியன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது.

ரோச் பூங்கா அரங்கத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவிற்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், கூடுதல் கலெக்டர் சுபம் தாக்கரே ஞான தேவ் ராவ், உதவி கலெக்டர் கவுரவ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட மதர் சமூக சேவை நிறுவனத்திற்கு தமிழ்நாடு கிரீன் சாம்பியன் விருதினையும், ஒரு லட்சத்திற்கான காசோலையையும் அமைச்சர் கீதாஜீவன், நிறுவன இயக்குனர் எஸ்.ஜே.கென்னடியிடம் வழங்கி பாராட்டினார்.

விழாவில் உதவி சுற்றுச்சூழல் பொறியாளர்கள் ஜோமஸ் ஜோசன், ரங்கசாமி, உதவி பொறியாளர்கள் முரளி கண்ணன், பிரவீன் பாண்டியன் விளாத்திகுளம் ரேஞ்சர் கவின், திருச்செந்தூர் ரேஞ்சர் கனிமொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்