குமரியில் 15 கலைஞர்களுக்கு விருது கலெக்டர் அறிவிப்பு

குமரியில் 15 கலைஞர்களுக்கு விருது கலெக்டர் அறிவிப்பு

Update: 2022-06-24 20:14 GMT

நாகர்கோவில், 

குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் கன்னியாகுமரி மாவட்ட கலை மன்றத்தின் வாயிலாக 2021-22-ம் ஆண்டின் மாவட்ட அளவிலான அகவை மற்றும் கலை புலமையின் அடிப்படையில் விருது வழங்க சிறந்த 15 கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதாவது நாகர்கோவிலை சேர்ந்த துர்காதேவி (வயிலின்), ஜெயஸ்ரீ (நடனம்), நித்திரவிளையை சோ்ந்த செல்வன் ஜோ தீரஜ் (பாட்டு) ஆகியோர் கலை இளமணி கலைப்பிரிவில் விருது பெறுகிறார்கள். இதேபோல் வளர்மணி கலைப்பிரிவில் பருத்திவிளை சிவின்ஸ் (ஓவியம்), வேட்டுகாட்டுவிளை ஸ்டாலின் ஜோஸ் (சிலம்பம்), கல்குறிச்சி செல்வன்.ஆர்.எம்.விவேக் (சிற்பம்) ஆகியவர்கள் விருது பெறுகிறார்கள்.

கலைச்சுடர்மணி கலைப்பிரிவில் அகஸ்தீஸ்வரம் திலகவதி (வாய்ப்பாட்டு), குசவிளை கிருஷ்ணன் (நாதசுரம்), நாகர்கோவில் ஜஷா (மரபு ஓவியம்), கலைநன்மணி கலைப்பிரிவில் முன்சிறை சுகுமாரன் (விளக்குகெட்டு கலைஞர்), பாட்டத்துவிளை ராஜசேகரன் (ஓவியம்), தோவாளை முத்துக்கோபால் (தோல்பாவைக்கூத்து) ஆகியோர் விருது பெறுகிறார்கள்.

கலைமுதுமணி கலைப்பிரிவில் கல்லூக்கட்டி சந்திப்பை சேர்ந்த கணேசன் (வில்லிசை- குடம்), தலக்குளம் வேலப்பன் (சிலம்பம்) மற்றும் தேங்காப்பட்டணம் தேவதாஸ் (நாடகம்) ஆகியோர் கலைப்பிரிவுகளில் விருது பெறுகிறார்கள். விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட கலைஞர்கள் மாவட்டத்தில் நடைபெறவுள்ள அரசு விழாவில், விருதுக்கான பொற்கிழி, பட்டயம் மற்றும் பொன்னாடை வழங்கி கவுரவிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்