தூத்துக்குடி மரியன்னை கல்லூரியில் பரிசளிப்பு விழா

தூத்துக்குடி மரியன்னை கல்லூரியில் பரிசளிப்பு விழா நடந்தது.;

Update: 2022-11-11 18:45 GMT

தூத்துக்குடி தூய மரியன்னை மகளிர் கல்லூரியில் மரியன் தேடல் எனும் இதழின் வெளியீட்டு விழா மற்றும் ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பித்தவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் லூசியா ரோஸ் தலைமை தாங்கினார். விலங்கியல் துறை இணை பேராசிரியர் ஜோஸ்லின் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக வ.உ.சி கல்லூரி பேராசிரியர் சிவசுப்பிரமணியன் கலந்து கொண்டு மரியன் தேடல் இதழை வெளியிட்டார். தொடர்ந்து ஆராய்ச்சி கட்டுரைகள், புத்தகங்கள் வெளியிட்ட பேராசிரியர்கள், மாணவர்கள் 65 பேருக்கு நினைவுப்பரிசு மற்றும் ரொக்கப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

விழாவில் கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். நூலகத்துறை தலைவர் வினிதா நன்றி கூறினார். நிகழ்ச்சியை ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் சண்முகஜோதி தொகுத்து வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்