பரிசளிப்பு விழா

ஆனைகுளம் ஆரம்பப்பள்ளியில் பட்டமளிப்பு-பரிசளிப்பு விழா நடந்தது.;

Update: 2023-04-30 18:45 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூர் ஒன்றியம் ஆனைகுளம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் பட்டமளிப்பு மற்றும் பரிசளிப்பு விழா வட்டாரகல்வி அலுவலர் க.மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் பஞ்சவர்ணம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கலீல் ரகுமான், வட்டார வளமைய மேற்பார்வையாளர் பேபி மாலதி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் மோதிலால் அனைவரையும் வரவேற்றார். ஆசிரியை ஜரினாபானு பள்ளி செயல்பாட்டு அறிக்கை வாசித்தார்.

ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. விடுப்பின்றி பள்ளிக்கு வருகை புரிந்த மற்றும் சிறப்பிடம் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது. யோகா, கலை, நாடகம் நடைபெற்றது. யோகா மாஸ்டர் விஷ்ணு யோகா பயிற்சி அளித்தார்.

ஆசிரிய பயிற்றுனர் சுந்தரேஸ்வரி, இல்லம் தேடிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சார்லஸ், தலைமை ஆசிரியைகள் இசபெல்லா, கலாராணி, பள்ளி மேலாண்மை குழு ராஜா, முன்னாள் தலைவர் முகம்மது உசேன் ராஜா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்