கலை இலக்கியத்திறன் போட்டி பரிசளிப்பு விழா

மழலையர் தொடக்கப்பள்ளி சங்க கலை இலக்கியத்திறன் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது;

Update: 2022-11-05 18:45 GMT

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட மழலையர் தொடக்கப்பள்ளிகள் சங்கத்தின் சார்பில் கலை இலக்கியத்திறன் போட்டிகளாக ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல், தமிழ், ஆங்கில கையெழுத்து மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டியில் ஏராளமான மழலையர் தொடக்கப்பள்ளிகள் கலந்து கொண்டன.

இதற்கான பரிசளிப்பு விழா தூத்துக்குடி பெல் ஓட்டல் அரங்கில் நடந்தது. போட்டிகளில் முதலாவது பரிசை சாயர்புரம் செயின்ட் மேரீஸ் பள்ளியும், 2-வது பரிசை ஜாய் ஷரோன் பள்ளியும், 3-வது பரிசை செபத்தையாபுரம் அருள்மிகு முத்து மாலையம்மன் பள்ளியும் பெற்றன. மாவட்ட கல்வி அலுவலர் பிரபகுமார் தலைமை தாங்கி வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்