வேலாயுதம்பாளையம்-நொய்யல் பகுதிகளில் கனமழை
வேலாயுதம்பாளையம்-நொய்யல் பகுதிகளில் கனமழை பெய்தது.
வேலாயுதம்பாளையம், காகிதபுரம், புகழூர், நாணப்பரப்பு, தோட்டக்குறிச்சி, தளவாப்பாளையம், மண்மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் 1 மணி முதல் மதியம் 1½ மணி வரை கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் பள்ளமான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றன. இந்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.இதேபோல் நொய்யல், புன்னம் சத்திரம், புன்னம், வேட்டமங்கலம், குளத்துப்பாளையம், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், பாலத்துறை, நன்செய் புகழூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மதியம் கனமழை பெய்தது. இதனால் சாலையோர கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதி அடைந்தனர். கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் வாடிய பயிர்கள் துளிர் விட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.