அரசு வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்

கடலூர் மாவட்ட அரசு அலுவலர்கள், அரசு வாகனங்களை அலுவல் சாராத பணிகளுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்

Update: 2023-08-04 18:45 GMT

கடலூர்

குற்றச்சாட்டு

கடலூர் மாவட்டத்தில் மக்கள் நலன் சார்ந்த பணிகளை பார்வையிடுவதற்கும், வளர்ச்சி பணிகளை பார்வையிடுவதற்காகவும் அரசு அலுவலர்களுக்கு, அரசு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வாகனங்களை சில அலுவலர்கள் தனிப்பட்ட பணிகளுக்காக, அதாவது அலுவல் சாராத பிற பணிகளுக்கு பயன்படுத்தி வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இதை அறிந்த கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், மாவட்டத்தில் உள்ள அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தவிர்க்க வேண்டும்

கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து அரசு அலுவலர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்களை அரசு பணிகளுக்கு மட்டும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் அரசு வாகன ஓட்டுனர்களை தங்களது சொந்த வாகனங்களை இயக்குவதற்கும், அவர்களை அலுவல் சாராத பணிகள் மேற்கொள்ள வலியுறுத்துவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அரசு வாகனங்களை அலுவல் சாராத பிற பணிகளுக்கு பயன்படுத்தும் அலுவலர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த அறிவிப்புக்கு அரசு டிரைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்