டாக்டரின் பரிந்துரை இன்றி மருந்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்-கலெக்டர்

காய்ச்சல் பரவுவதை தடுக்க டாக்டரின் பரிந்துரை இன்றி மருந்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் வளர்மதி வேண்டுகோல் விடுத்துள்ளார்.

Update: 2023-03-17 18:36 GMT

காய்ச்சல் பரவுவதை தடுக்க டாக்டரின் பரிந்துரை இன்றி மருந்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் வளர்மதி வேண்டுகோல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தவிர்க்க வேண்டும்

தற்போது இந்தியா முழுவதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் இன்புளுயன்சா காய்ச்சல் பரவி வருகிறது. பொதுமக்கள் அனைவரும் அவர்களுக்கு ஏதேனும் காய்ச்சல், இருமல், தலைவலி, தொண்டை வலி மற்றும் உடல் வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பக்கத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையதிற்கு சென்று சிகிச்சை பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேற்படி காய்ச்சல் பரவலை தடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உரிய நேரத்தில் சிகிச்சை பெற்றால் உயிரிழப்பை தடுக்க முடியும் என்பதை அறிய வேண்டும். மேலும் டாக்டரிகளின் ஆலோசனை இல்லாமல் தாமாக மருந்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

தனிமனித இடைவெளி

மக்கள் அனைவரும் அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். முக கவசம் அணிதல், தனி மனித இடைவெளி கடைபிடித்தல், நன்கு கொதிக்க வைத்த நீரை பருகுதல் போன்ற செயல்கள் நம்மை கொரோனா, இன்புளுயன்சா, டெங்கு நோய் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும்.

இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்