தாலுகா அலுவலகம் முற்றுகை

Update: 2022-07-06 16:33 GMT


அவினாசி தாலுகா மேற்கு பதி கிராம ஆதி திராவிடர் மக்கள் ஆதிதிராவிடர் நலத்துறைகள் காணிப்பு குழு உறுப்பினர் நீலமலைமுத்துசாமி, ஆதி தமிழர் பேரவை மாவட்ட செயலார் மணி, கவிதா ஆகியோர் முன்னிலையில் அவினாசி தாலுக அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியதாவது: -

மேற்கு பதிகிராமம் கொன்னங்காடு ஆதிதிராவிடர் குடியிருப்பில் 27 குடும்பங்களுக்கு அரசு மூலம் இலவச வீட்டுமனை பட்டா வழங்கி, ஆதார் கார்டு, ரேஷன்கார்டு, குடிநீர் அனைத்து பவசதிகளுடன் வீடு கட்டி பல ஆண்டுகளாக குடியிருந்து வந்தோம். இந்த நிலையில் வீடுகள் கட்டியுள்ள இடம் வாரி புறம் போக்கு இடமாக உள்ளதால் இடித்து அப்புறப்படுத்தினால் மாற்று இடம் தருவதாக கிராம் நிர்வாக அலுவலர் உள்ளிட்ட வருவாய்துறையினர் கூறினார்கள். அதை நம்பி நாங்கள் வீடுகளை இடித்துவிட்டோம். அதில் 7 குடும்பத்திருக்கு மட்டும் மாற்று இடம் தந்துவிட்டு 20 குடும்பத்திருக்கு மாற்று இடம் தரவில்லை இதனால் குடியிருக்க இடமின்றி அவதிப்பட்டு வருகிறோம். எனவே மாற்று இடம் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்