மகாகாளியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா
திட்டச்சேரி மகாகாளியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா நடந்தது.
திட்டச்சேரி:
திட்டச்சேரி வெள்ளத்திடலில் மகாகாளியம்மன் கோவில் ஆவணி திருவிழா நடந்தது. விழாவில் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மதியம் அம்மனுக்கு கஞ்சி வார்த்தல், அன்னதானம், அபிஷேகமும், திருவிளக்கு பூஜை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சாமி வீதி உலா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் மகாகாளியம்மன் பல்லக்கில் வீதி உலாவும், நேற்று காலை அக்னி கப்பரை வீதி உலாவும், பெரியாச்சி, வீரனுக்கு படையல், விடையாற்றி நிகழ்ச்சிளும் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.